கனவுகள் விற்பனைக்கு
வாலிப கனவுகள்
இரண்டு- பத்து ரூபாய்..
வயோதிக கனவுகள்
ஒன்று- இரண்டு ரூபாய்..
காதல் கனவுகள்
தயவுசெய்து வரிசையில் வரவும்..
கலவி கனவுகள்
தரத்திற்கு ஏற்ப மாறுபடும்..
ஆடம்பர கனவுகள்
ஆயிரம் ரூபாய்..
வெற்றி கனவுகள்
விற்பனைக்கு அல்ல..
சோக கனவுகள்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்..
வேலை கனவுகள்
ஸ்டாக் இல்லை..
சாவு கனவுகள்
No guarantee..