என்ன சொல்லி விழுகிறது இந்த மழைத்துளி

உப்பில் இருந்து மாறித் தூய்மையாய் விழுகிறேன்
நல்வழி மாறுதல் நன்றன்றோ
சாதகப் பறவையாய் மாறி
மாசற்ற என்னை பருகுங்கள்

சின்னஞ்சிறு துளி என விட்டு விடாதீர்கள்
சிறு துளி பெருவெள்ளம் அன்றோ
நானும் உங்கள் சேய் தான்
என்னையும் சேகரியுங்கள் சேமியுங்கள்

நான் ஒன்று என விழுந்தால்
என் ஓசை கேட்கிறதா
கூட்டு என விழுந்தால்
நன்மை பல கோடி

ஒன்று என விழுந்தாலும்
நன்றேனச் செயல் பட வேண்டும்
ஆதலால் என்னை உன் தாகம் தீர்க்கும்
குவளையில் சேர்த்துவிடு உன்னில் கலக்கிறேன்

எழுதியவர் : ரமணி (2-Sep-14, 10:43 am)
பார்வை : 135

மேலே