கவி உள்ளம்கடல் வெள்ளம்

எந்த நிலையிலும் துவளா
இனிய மனத்தைக் கேட்டேன்
சொந்தக் காலிலே நிற்கும்
சுகத்தை நானும் கேட்டேன்
வந்து விழுந்திட வார்த்தை
வரத்தைக் கவியில் கேட்டேன்
உந்தன் அன்பதே போதும்
உருகித் தினமும் கேட்டேன்

சொத்தும் பத்தும் கேட்டேன்
சொந்தம் பந்தம் கேட்டேன்
நித்தம் சுத்தும் உலகப்
பந்தைத் தந்திட கேட்டேன்
கத்தும் அந்தக் கடல்கள்
கையில் பையில் கேட்டேன்
தட்டில் வட்ட நிலவும்
தரவே விரைவாக் கேட்டேன்

புலமையும் செழுமையும் சேரப்
புகழ்மிகு உன்னைக் கேட்டேன்
நிலைமையாம் ஏழ்மை மாற்றி
நிறைவினை அருளக் கேட்டேன்
தலைவனே!கலைஞனே!இறைவா!
தன்னிகர் முன்னிலை அற்றோய்!
உலகினில் தமிழால் வாழ
உதவிடு! தமிழும் வாழ!.... -அபி மலேசியா

எழுதியவர் : அபி மலேசியா (2-Sep-14, 10:11 am)
பார்வை : 456

மேலே