மகிழ்வித்துவிடு -வித்யா

மேகக் கோலம்-வித்யா

உலகினுக்கெல்லாம் விரிந்திருக்கும்
ஒற்றைக்குடையை அண்ணாந்து
பார்த்தேன்..........

மேக தேவி ஒருத்தி
தலைவாரி
பூச்சூடிக் கொண்டிருந்தாள்......!!

மற்றொருத்தியோ
விண்மீன்கள்
பொறுக்கிக்கொண்டிருந்தாள்...!!

யாரோ ஒருத்தி
தொலைத்த எதையோ
தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தாள்...!!

ஆன மட்டும்
பார்த்துவிட்டேன் என் கவனிப்பை
யாரும் கண்டுகொள்வதாய் இல்லை.......!!

ஆதலால்
இன்றும் வானம் பார்த்தே
காத்திருக்கிறேன்........

இன்றாவது
விண்ணிறங்கி மண்தொட்டு
எனை மகிழ்வித்துவிடு என்றழைக்க.........!!

எழுதியவர் : வித்யா (2-Sep-14, 1:56 am)
பார்வை : 369

மேலே