அன்புள்ள அப்பா
சிரித்தாள் பெண் ஒருத்தி
சிந்திக்க நேரமில்லை
சந்திக்க இடம் கேட்டேன்
வீட்டுத் தோட்டம் என்றாள்
சென்றேன் வந்தாள்
வந்தவளும் புன்னகைத்தாள்
உதட்டோரச் சிரிப்பு தான்
நானும் சிரித்தேன் நெருங்கி வந்தாள்
என் பின்னே யாரோ உணர்ந்தேன்
அப்பா என்றாள் திடுக்குற்றேன்
திரும்பி பார்த்தேன்
அவர் முகத்தில் கோபத்தை எதிர் பார்த்தேன்
அது கோபம் அல்ல நேசம்
மகளின் மீதுள்ள பாசம்
ஏம்மா உனக்கும் காதலா
நீ விரும்பியது எது கிடைக்கவில்லை
உன் விருப்பபடியே உங்கள் இருவருக்கும்
நானே மணம் முடித்து வைக்கிறேன்
என்று கூறி அழைத்துச் சென்றார்
நாங்களும் அடிக்க கொண்டு செல்லும் ஆடுகளைப் போல்
அவர் பின்னே சென்றோம்
வீடுவரை சென்றோம் வியர்த்துக் கொட்டியது
நாங்கள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை
அவள் அப்பா உண்மையில் தங்கமான மனிதன்
தன்வாழ்க்கையில் நடந்த காதல்
கலவரங்களை சொல்லத் தொடங்கினார்
காதல் நல்ல விஷயம் தான்
அதைப் புரிந்து கொள்வோர் ஒருசிலர்
என் பிள்ளகளின் காதலைப் புரிந்து கொள்ள
என்னால் முடிந்தது. முதலில் நம்பிக்கை
பின்பு அன்பு புரிதல் இவை இருந்தால்
காதல் நல்லது அழகானது ஆரோக்கியமானது
உண்மையில் அன்றிலிருந்து எங்கள் காதலில்
வசந்தம்தான் .
இப்படி அப்பாக்கள் கிடைக்க வேண்டுமே
நாங்கள் கொடுத்து வைத்தவர்களே
காதலே வாழ்க காதலர்களே வாழ்க