நூல் விடு தூது
என் மனம் இருண்ட வீடு
அதில் நீ ஏற்றுவாயா குடும்ப விளக்கு ?
உன் முகத்தில் கண்டேன் அழகின் சிரிப்பு .
அது தூறிச் சென்றது சஞ்சீவ பர்வதத்தின் சாரலை ...
என் அன்பினை உனக்கு எடுத்துரைத்தால் அது பெரியபுராணம் .
பாலை வாழ்விலும் பயனுண்டு கள்ளிக்காட்டு இதிகாசமாய் நீ வரக்கண்டு
நான் யாசிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வாசகம்
நம் வாழ்வினை மேம்படுத்தும் திருவாசகம்
..