ஹீத்ரூ விமான நிலையம்

லண்டனின் ஹீத்ரூ விமான நிலையம் UK யின் பரபரப்பானதும், உலக அளவில்
மூன்றாவது இடத்தையும் வகிக்கிறது. கடந்த ஆண்டு 72,368,630 பயணிகளின்
போக்குவரத்தைக் கையாண்டிருக்கிறது.

முதல் இடத்தை அமெரிக்காவின் Hartsfield–Jackson Atlanta International ஏர்போர்ட் ம்,
இரண்டாவது இடத்தை சீனாவின் Beijing Capital International ஏர்போர்ட் ம் பெறுகிறது.

ஹீத்ரூ விமான நிலையத்தில் ஐந்து முனையங்கள் உள்ளன. 82 விமான நிறுவனங்களின்
விமானங்கள் தினமும் தரை இறங்குகின்றன. நான் மகனுடன் தங்கியிருக்கும் cranston close
என்ற இடம் விமான நிலையத்திலிருந்து 10 நிமிடப் பயண தூரம் (2.5 மைல்) இருக்கிறது.

விமான நிலையத்திலிருந்தே underground tube rail பல இடங்களை இணைத்துச் செல்கிறது.

தினமும் வீட்டிலிருந்து காலை 11 மணிக்கு கிளம்பி, அருகிலுள்ள இடத்தில் அமர்ந்து
அன்றைய செய்தித்தாளை வாசிப்பது வழக்கம். அரை நிமிடத்திற்கு ஒன்றாக வட
கிழக்கிலிருந்தும், தென் கிழக்கிலிருந்தும் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து
இறங்கிக் கொண்டே இருப்பது மிகுந்த ஆச்சர்யமாக இருக்கும். இறங்கும் பொழுதே
எந்த நிறுவனத்தைச் சேர்ந்தது என்று வாசிக்க முடியும்.

ஆனால் விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, விமான சப்தம் பழகிப்
போனாலும், ஒரு தொல்லையே. குறிப்பாக கோடைக்காலங்களில் வீடுகளின்
ஜன்னலைத் திறந்து வைத்து இரவு நேரங்களில் உறங்க முடியாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Sep-14, 12:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 133

மேலே