அந்த ஒரு நொடி
நண்பர்களே..........
உங்களுக்கு நினைவிருக்கிறதா......சில நாட்களுக்கு முன்பு உங்களிடம் சொல்லி இருந்தேனே.............
என் இதயம் இரண்டு மடங்காகத் துடிக்கப் போகும் அந்த ஒரு நொடிக்காக இப்போதிருந்தே காத்திருக்கிறேன் என்று.....
வந்து விட்டது....
வந்து விட்டது....
என்னை வந்தடைந்தே விட்டது அந்த நொடி.....
ஆம் நண்பர்களே.....திரு.கவிதா சபாபதி ஐயா அவர்களின் கவிதைத் தொகுப்பான
***இவர்களால் சிலிர்க்கும் இயற்கை***
இப்போது என் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது....
நான் காற்றில் அல்லவா மிதந்து கொண்டிருக்கிறேன்....இப்போது என் கால்கள் தரையில் இல்லை நண்பர்களே....
என் வாழ்வின் பொன்னாள் ...இன்று கோலாகல கொண்டாட்ட நாள்....
என்னவென்று சொல்ல நான் எப்படித் தான் சொல்ல.....என் மகிழ்ச்சியை....
வார்த்தைகளற்ற நிலை என்று பல முறை எழுதியதுண்டு...உண்மையில் அதை நான் இந்த நொடி உணர்ந்து கொண்டிருக்கிறேன்......
நமது கவிதைகளை , கவிதைக் கடவுள்களின் கவிதைகளுக்கு மத்தியில் காணும் ஆனந்தம் இருக்கிறதே.....அது எத்தகையதென்றால் ,,,,,,
ம்ம் நண்பர்களே என்னை மன்னிக்க வேண்டுகிறேன்....இந்த ஆனந்தத்தைப் பற்றி விளக்க உண்மையில் என்னிடம் வார்த்தைகளே இல்லவே இல்லை....
ஏழு நிறங்களைத் தாண்டிய வானவில்லும்
நூறு வண்ணங்களைக் கொண்ட பட்டாம்பூச்சியும்
முடிவு அறிந்து கொள்ள முடியாத பாதைகளும்
தன்னைத் தானே ஒரு கவிதையாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் அருவிகளும்
தேவதைகளும் மழலைகளும்
வைகறை நிலவும் வசந்தங்களும்
மலரின் காணங்களும் புல்லின் நுனியின் மென்மையும்
கடற் புறத்தின் ஈரக் காற்றும் நீரும் நிலமும்
என்னவென்று சொல்ல நான் எதையென்று சொல்ல.....
மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும்
தொலைந்து போகப் போகிறேன்... சிலிர்க்கும் இயற்கைக்குள்.....
தொலைந்து போன என்னை , மீண்டும் தேடப் போகிறேன் , மீண்டும் தொலைந்து போய்....
கனவா இல்லை நிஜம் தானா என்று இன்றளவும் நம்ப முடியாத , இத்தகைய பாக்கியத்தை எனக்குக் கொடுத்த திரு.கவித்தாசபாபதி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.....!!
- கிருத்திகா தாஸ்...