மன நிறைவே பெரு மகிழ்ச்சி

இமை திறக்கும் நொடியில் உருவாக்குவோம்
இந்திர லோகம் - அது
இயற்கை சூழலின் நடுவே இருக்கின்ற நமது குடிசை........!
நல்லவற்றை சார்ந்திருப்பதும் நல்லவையாக மாறும்
நாம் எண்ணுகின்ற நினைவுகளும் கவிதைகள் ஆகும்
நமது இதயம் நல்லது - அதில்
நலமாய் எண்ணங்கள் நமது...! அங்கே
கிடைத்ததில் நிறைவென்ற நினைவு - வெகு
கிட்டத்தில் சொர்க்கத்தைக் காட்டும்......!!