அம்மாவும் ஆண்டவனும்
கட்டற்ற இருட்டறையில்
கருணையோடு கருவறையில்
மூச்சுக்கு மூச்சாக
பெருமூச்சு விட்டால்
நான் சிதைந்து போவேன் என்று
மூச்சை காத்தாய்
நான்
பிறக்க நீ பட்ட கஷ்டத்தை
நான் காணவில்லை
கண்டிருந்தால்
நானே
இறந்திருப்பேன் உனக்கு
கஷ்டமில்லாமல்
நான்
சாப்பிடாமல் இருந்து பார்த்ததில்லை
நீ
ஒரு நாள் கூட வயிறு நிரம்ப
சாப்பிட்டு நான் பார்த்தது இல்லை
உன்
மகன்
படிப்புக்கு நீ பத்து பாத்திரம்
தேச்ச
இந்த மகன்
பட்டம் வாங்க தானே உன்
உசுர புடிச்சு
வச்ச
உன்
மகன் வேலைக்கு போறன்னு மத்தவங்க
சொன்னா உனக்கு
பெருமை
அதே போல்
உன் தாய் வேலைக்கு போறன்னு
சொன்னா யாருக்கு
பெருமை
நீ
பட்டு சேலை கட்டி
நான் பார்த்ததில்ல
உன்
ஒட்டு சேலை
விட்டெறிஞ்சு
நூல் சேலை வாங்கி
கொடுக்க எனக்கு
நாதியில்லை
தங்கத வித்து
தங்க மகன படிக்கவச்ச
பத்து பாத்திரம் தேச்சு
பட்டணம் அனுப்பி
வச்ச
தனியா இருந்தா
தவிச்சு போவேன்னு
தங்கத கட்டி
வச்ச
அருமையா பிறந்த
என் மகள் மேல ஆசை
வச்ச
அவள் அடி எடுத்து
வைக்கும் போது
முதல் அடி எடுத்து
வச்ச
என்ன பெத்தவளே
இப்ப
யார கேட்டு
உன் உயிர
இந்த
மண்ணுக்குள்ள பொத்தி வச்ச