என்னவளுக்கு

காதல் என்பது
பகிர்தல் அல்ல
புரிதல்
பகிர்ந்தால் சந்தோசம்
உண்டாகும் ஆனால்
அங்கே அன்பு
குறையும்

அதே போல் புரிந்தால் தான்
ஆசைகள் அதிகமாகும்
கனவுகள் கடமையாகும்
புரிதல் புது உறவை
மேம்படுத்தும்

அவள்
கடைக்கண் பார்வைக்கு
கட்டளைகள் கொட்டும்
அவள்
கால் கொலுசு சத்தத்திற்கு
கவிதைகள் கொட்டும்
அவள்
சிரிப்பிற்கு சித்திரம்
வியக்கும்
அவள்
கொஞ்சலுக்கு கருணையும்
மகிழும்

உன்னை
நித்தம் கண்டிருந்தால்
மறந்திருப்பேன் ஒரு வேளை
உன்
பார்வைக்காக கிடக்கிறேன்
தவமாய்
ஒவ்வொரு வேளையும்


எவன் ஒருவன்
தன்
காதலியின் கண்ணீரை
துடைக்கிறானோ
அவனல்ல பாக்கியசாலி
தன்
காதலியின் வாயிலிருந்து
கண்ணீர் என்ற
வார்தைக் கூட வரக்கூடாது
என்று நினைப்பவன்
தான்
பாக்கியசாலி

காதலியையும் ,மனைவியையும்
நேசிப்பவன்
தாயை மறந்துவிடுவதில்லை
ஏனென்றல்
90%பாசம் தாயிடம் கற்று
மீதிஉள்ள 10% நேசத்தை
தன்னிலிருந்து தான்
மற்றவர்களை நேசிக்கிறான்

காதலிடம் பேசிகொண்டிருப்பது
மணிக்கணக்கில்
பேசிகொண்டிருப்பது
சுகம் என்றல்
உண்மையான சுகத்தை
நான் தான்
அனுபவிக்கிறேன்
அவள் என்னிடம் மணிக்கணக்கில்
பேசவில்லை
ஆனால்
வருட கணக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் ......................

எழுதியவர் : ப்ரியசெந்தில்குமார் (5-Sep-14, 10:40 am)
Tanglish : ennavalukku
பார்வை : 176

மேலே