மாயக்கண்ணன்

கண்ணுக்குள்ளே காதலா
கனவில் நீ வந்ததால்...
மனதை கொஞ்சம் கரைக்கிறாய்
மழைச் சாரலாய் வீசுவதால்...
நெஞ்சை மெல்ல வருடுகிறாய்
இதயத்திலே வாழ்வதால்...
இன்னும் என்ன செய்யப் போகிறாய்
என்னுள்ளே ஏதேதோ மாற்றம் செய்கிறாய்........

கண்ணுக்குள்ளே காதலா
கனவில் நீ வந்ததால்...

ஆகாச வானில் தெரியாத நட்சத்திரம்
என் வானில் வந்து ஜொலிக்குது...
அது ஒளிரும் வெளிச்சத்தில்
இந்த வாழ்வும் புதிதாய் முளைக்குது...

கண்ணுக்குள் நீ நிழலாய் வந்ததும்
கண்ணாடி கண்சிமிட்டி என்னை அழைக்குதே...
விழியை விட்டு செல்ல முயன்றதும்
இமை கதவுகள் விழியை அடைக்குதே...

உன் அருகில் இருக்கும் போது
இரவின் நீளம் குறைவதாக தோன்றுமே...
விட்டு விலகி போனாலே
உன்னைப் பார்க்க நெஞ்சம் ஏங்குமே.......

கண்ணுக்குள்ளே காதலா
கனவில் நீ வந்ததால்........

பூவூக்குள் இருக்கும் தேன் துளி
காணாமல் போய்விடும் வண்ணத்துப் பூச்சியால்...
மனசுக்குள் இருக்கும் கோபமும்
பாசமாய் மாறிடும் உன் செய்கையால்...

உன்னை பார்க்கும் நேரத்தில்
ஆனந்த புன்னகை உதட்டில் பூக்கும்...
நீ நெருங்கி வந்தால்
இதயம் பதற்றத்தில் அதிகம் துடிக்கும்...

கண்கள் கவிதைகள் பல வடித்திடும்
கண்ணன் கரங்கள் என்னை தீண்டயில்...
அந்த கண்ணுக்கு துடித்திடும் இமையே காவல்
இந்த இராதைக்கு கண்ணன் மீதே காதல்.........

கண்ணுக்குள்ளே காதலா
கனவில் நீ வந்ததால்.........

எழுதியவர் : இதயம் விஜய் (5-Sep-14, 11:40 am)
பார்வை : 301

மேலே