உன்னில் ஒரு புனிதயாத்திரை
![](https://eluthu.com/images/loading.gif)
குறிப்பு : ஆன்மிக பக்தகோடிகள் மன்னிக்க
பௌர்ணமியில்
கிரிவலம் வருவார்கள் !
நான்
ஒரு பௌர்ணமியையே
கிரிவலம் வருகிறேன்
கண்களால் !
=======================
உடம்பால் செய்வது
அங்கப்பிரதட்சணம் !
பாதங்களால் செய்வது
அடிப்பிரதட்சணம் !
என் கண்களால்
உன் மேனியில்
செய்கிறேனே .......
அது
என்ன பிரதட்சணம் ?
=======================
பாதயாத்திரை செய்யும்
பக்தர்கள்
சற்றே இளைப்பாற
சாலையில் ஆங்காங்கே
சத்திரங்கள் உண்டு !
கண் யாத்திரை செய்யும்
உன் பக்தனான
எனக்கும்
சற்றே இளைப்பாற
உன் மேனிச்சாலையில்
ஆங்காங்கே
சத்திரங்கள் உண்டு !
=======================
கஷ்டப்பட்டு
மலைகள் மீதேறிக்
காணுவது
முதல்வகை
தரிசனம் !
எட்ட நின்று
மலைகள் கண்டு
ஒரு கும்பிடு செய்து
கன்னத்தில்
போட்டுக்கொள்வது
இரண்டாம்வகை
தரிசனம் !
நான் செய்வது
இரண்டாம்வகை
தரிசனம்தான்
என்றாலும்
அதற்கே எனக்கு
மூச்சு வாங்குகிறது !
=======================
பக்தர்கள்
காணவேண்டிய
திருப்பதிகள்
108 உள்ளனவாம்
உலகில் !
அதேபோல்
என் கண்கள்
காணவேண்டிய
திருப்பதிகள்
உன்னில் எத்தனை ?
=======================
உலகப்
புனித யாத்திரைகளுக்கு
மூட்டை மூட்டையாய்ப்
பணம் வேண்டுமாமே !
ஆனால்
என்
புனித யாத்திரைகளோ
இங்கே
பைசா செலவில்லாமல்
முடிந்து விடுகின்றன !
=======================
- கிருஷ்ண தேவன்
மனசாட்சி : கிருஷ்ண தேவா ........நீ திருந்தவே மாட்டாய் !
கிருஷ்ண தேவன் : மிக்க நன்றி மனசாட்சியே !