இப்படிக்கு மாணவன்
பள்ளி வாத்தியார்கள்
பலரும் பாடத்தை
கற்பிக்கையில்
வாழ்க்கையை
படிடா என்ற மணி ஐயா ..
ராமாயணம் முதல்
பெரியார் வரை வாசி
என்று தமிழ் தந்த
ராமலிங்க வாத்தியார்...
"பிறர் கைதட்டலுக்கு
பாடாமல்
உனக்காக
உண்மையாக பாடினால்
பிறர் கைதட்டுவர்.!"
இசை ஆசான் சிவராமன்.
எழுத்து நடை,
ஆரம்ப சிந்தனைகள்
அளித்த
பாலகுமாரன்.
"இசை , எழுத்து
எல்லா கலைகளும்
முதலில் மக்கள்
முன்னேற்றம்
சார வேண்டும்! "
தோழர் ரமேஷ் .
"பொருள் ஈட்டுவது
ஒன்றும் பாவமல்ல.
ஈட்டும் வழிதான்
பாவமாக
இருக்கக் கூடாது"
B C KANG
இவ்வனைவரிடமும்
இன்னும் பற்பல
குருக்களிடமும்
பயின்ற
பயிலும்
பயிலப் போகும்
மாணவன்!
-ராம்வசந்த்