எந்திரமாய் நானும்

ஏனம்மா அப்பாவை இன்னும்
காணலை? - அப்பாக்கு
வேலை இன்னும் முடியலையா?

எப்பவுமே இப்படித்தான்....
உறுதியளிப்பார் - ஆனால்
நிச்சயமாய் அதை செய்யமாட்டார்.

அன்று
கத்திய என் அப்பாவின்
காதில் மட்டும் - இன்று

என்னமோ என் குரல் கேட்பதேயில்லை
அதே கேள்விகள் என்னிடமும்
கேட்பதற்கு அம்மா வரவேண்டுமே!

அது சரி.....
அம்மாவை ஏன் இன்னும் காணலை.
யாரிடம் கேட்பது .....?

இன்று என் மனதில் ஒரே பயம்
தொடரும் இந்த சங்கிலியில்
நாளை நானும் ஓர் வளையமாய்.....

ஓ! கடவுளே !
உன் படைப்பு என்னவோ
"மனிதன்" தான்

"தான் மனிதன்" உலகில் தன்னை
நிலை நிறுத்த எந்திரமாய்.....
நாளை...

எதிர்காலம் என்ன என யாரும் கூறமுடியாது
ஆனால் ஒருவேளை என்னை
நிரூபிக்க வேண்டி....

எழுதியவர் : krish (6-Sep-14, 7:17 pm)
பார்வை : 56

மேலே