விடியல்
கணக்கில்லா சம்பாத்தியம் கொடுக்கும்
கணணி வேலை தளத்தில்
களைக்காது அலுக்காது
நடுச்சாமம் கடந்து வேலை செய்து
சிவந்த கண்களுடன்
வீடு திரும்பி
பகல் தூக்கம் போடும்
உதயமும் அஸ்தமனமும் இல்லா
இயந்திர வாழ்விலிருந்து
விடியலுக்காய் ஏங்கும்
விழிகளே இன்று உலகில் ஏராளம்.