நிலா முகம்

நிலா சோறுண்ட காலம் கடந்து
ஆராய்ச்சி ஆச்சரியமாய்
ஆம்ஸ்ரோங்கை வியந்த காலமும் கடந்து
கனவில் நிலவு வந்ததாய் மகிழ்ந்த நாளும் கடந்து
இன்று நிமிர்ந்து நிலா பார்க்கவே
நேரமின்றி வேலையில் என்னை
தொலைத்து நினைவை திருப்பிய வேளை.....
"நிலா நிலா ஓடி வா ...."
என் காதோரமாய் எஞ்சியது என்னவோ
என் தாயின் குரல் மட்டுமே
பசுமையாய் நிலா கட்டிய என் தாயின்
"நிலா முகம்" மட்டும் என் நினைவில்....
என்றும் பசுமையாய் .....

எழுதியவர் : krish (6-Sep-14, 7:36 pm)
Tanglish : nila mukam
பார்வை : 142

மேலே