இந்த பூமியே சிவக்கும்

மூச்சடக்கி முன் வந்து,
என் முகக் கண்ணை நோட்டமிட்டு,
பேச்சடக்கி பின் தள்ளி செல்லும்,
நீயே, என் அதிர்வின் விசை.!
என் குரலை கேட்க,
நீ செய்யும் சிறு சிறு சேட்டைகளும், குறும்புகளும் நான் அறியேன்.
என் குரலோவியம் நீ காணவே,
நான் இங்கு குழைகிரேன்.!!
அதை நீ உணர்வாய் .!!
என் கண்ணுக்கு நீயும் நெடு வளர்ந்த மழலையே..!
வாயில் வருவதை உளறிக் தீர்க்கும் நேரங்களில்.
உன்னை பார்க்கையிலே,
என் பிஞ்சு கண்ணம் மட்டுமல்ல, இந்த பூமியே சிவக்கும்..!