அன்னை அவளே
உதிரத்தால் உயிர் கொடுப்பாள்!!!
தன் உடல் வருத்தி உடல் வளர்ப்பாள்!!!
நீ சிரிக்க மகிழ்ந்திடுவாள்
நீ அழ துடித்திடுவாள்!!!
உண்ணாமல் நீ உறங்க
ஒருபோதும் விட மாட்டாள்!!!
ஆளாகி நீ நிற்க
ஆனந்தம் அடைந்திடுவாள்!!!
இவை எல்லாம் நீ மறந்து;
(வேறு) இல்லத்தில் அடைத்தாலும்!!!
உனக்காக வேண்டும் உள்ளம்
அவளன்றி யாரும் இல்லை !!!!