விரல் மொழி

விரல்கள் குவித்து
இதழ்களில் பொருத்தி
மெல்லியதாய்
செருமுகிறாய்...!!
இன்றைய சந்திப்புகளின்
கடைசி நிமிடங்கள்
எனப்படுவது அதுவாகிப்
போகிறது....!!!
பூச்சு தவிர்த்திருந்த
வெள்ளை நகங்கள்
உணர்த்தி விடுகிறது
உன்
மனதின் நிறம்
என்னவென்று....!!!
உன் பெருவிரலும்
ஆள்காட்டிக்கும்
இடையிலான சிறுபரப்பில்
நசுங்கிச் சிதைகிறது
என்
புஜப்பரப்பின் தசைக்கூறு....
நெளிந்து கொண்டே
நகர்கிறேன்.....
வரவேற்பாளினியின்
புன்னகை தவிர்த்து....!!!
மூளை சமிஞ்சை
கடத்தும் பொழுதெல்லாம்
பேசிக்கொள்கிறது
உன் விரலும்... உன் விரலும்....
இதயம் சமிஞ்சை
பரப்பும் பொழுதெல்லாம்
பேசிக்கொள்கிறது
உன் விரலும்.... என் விரலும்....!!!