என்ன பயன்

நல்ல காய் தேடித் பார்த்து வாங்கி
நயம் அரிசி தேர்ந்தெடுத்து சமைத்து
நாம் சமைத்ததை
நாம் மட்டுமே சாப்பிடுவதில்
என்ன பயன்??

வண்ண வண்ணமாய்
ஆடை எடுத்து
அழகில் தேர்ந்து உடுத்தி
அதையும் கந்தலாகும் வரை
நாமே உடுத்துவதில் என்ன பயன்??

அழகாய் வாசனையை உமிழ்ந்து
பூக்கும் பூக்களை
நாம் மட்டுமே கூந்தலில்
சூடிக் கொள்வதில் என்ன உபயோகம்??

நாம் பெறும் பொருட்களை
நாம் அனுபவிக்கும் சுகத்தை
நாலு பேருக்கு கொடுத்து
அனுபவித்தால் எத்தனை சுகம்....

அதுதான்
மெல்லிய இசை கேட்கும் சுகம்...
இனிய தென்றலை அனுபவிக்கும் சுகம்....
என்ன சுகம் இந்த சுகம்...

எழுதியவர் : சாந்தி ராஜி (7-Sep-14, 10:50 pm)
Tanglish : yenna payan
பார்வை : 88

மேலே