எனக்காய் நீ

எனக்காய் நீ ..............
********************************

எண்ணி இருபது நொடி போல
கடந்து போனது நம்வாழ்வில்...
இருபது வருடங்கள்.......
இன்னாருக்கு இன்னார் என்ற
கடவுளின் முடிச்சிற்குள்
கண்ணியமாய் நாம் மாட்டிக்கொண்டோம்..
உனக்காய் நானும் எனக்காய் நீயும்
பிறந்ததாகவே பெருமிதம் கொண்டோம்...
சலனங்களும் சலிப்புகளும்
ஆங்காங்கே எட்டிப்பர்த்தாலும்
சளைத்துப் போகவில்லை நாம்.....

எனக்காக நீயும் உனக்காக நானும்
எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள்
ஒவ்வொன்றும் வெகு
சுவாரஸ்யமானது.......
நாம் ஒருவருக்கொருவர் முன்னேற
ஏணியாய் இருந்ததை விட
தட்டி விடுவதிலேயே
குறியாக இருந்தோம்....
நாம் ஒருவரை ஒருவர்
முன்னேற விடாமல் யோசித்த
தருணத்தை நம் முன்னேற்றத்திற்குப்
பயன்படுத்த வில்லை....

எனக்கு நீ தாயாகவும்
தந்தையாகவும் நண்பனாகவும்
ஏன் எதிரியாகவும் கூட
அவதாரமெடுத்தாய்.....
என்னை ஒரு சிலையாக்க
நீயே சிற்பியானாய்....
என் இதய நிலம் பண்படுத்தும்
உழவனுமானாய்....
எனக்குள் உறங்கிய என்னை
தட்டிஎழுப்பினாய்.....

ஊர்மெச்சுமளவு வாழவைத்தாய்....
ஆண்டுகள் இரு தசம்
முடிந்த பின்னும்
புதுப் பெண்ணாய் வலம்
வரச்செய்தாய்......
இருசேய்களை மடி சுமக்க வைத்து
தாயாக்கிப் பெருமைப்படுத்தினாய்.....
நம்மில் யார் குழந்தையென்று
தெரியமுடியா அளவிற்கு
நமக்கு நாமே குழந்தையுமானோம்.....

என் குறும்புகள் ஒவ்வொன்றையும்
பொறுமையோடு சகித்தாய்.....
என் வசை மொழியையும்
கவிதை போல் ரசித்தாய்....
உன் பொறுமையை அளவிட
என்னிடம் அளவுகோல் கிடையாது....
உன் அன்பை பாராட்ட
வார்த்தைகளும் இல்லை....
அதையெழுத சொல்லாடல்களுமில்லை.....

அடுத்த பிறவியிலும் உனக்கே
இல்லாளாக ஆசை
ஏனோ இறைவன் இதை
என் கடைசிப் பிறப்பாக
அறிவித்து விட்டான்....
போனால் போகட்டும்
மறுபிறவி வாழ்வையும்
இப்பிறப்பிலேயே வாழ்வோம்
இன்னும் நூறாண்டுகள்.......

.............சஹானா தாஸ்

............என் அன்புக் கணவருக்கு நன்றி! என் இருபதாவது திருமண நாள் இன்று.......

எழுதியவர் : சஹானா தாஸ் (9-Sep-14, 12:30 am)
Tanglish : enakkaai nee
பார்வை : 701

மேலே