இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா Iniya Piranthanal Valthukkal Amma
ஓவ்வொரு விடியலும்
சாதரணாமவே மலர்கின்றன...
பூக்களின் வாசனையில்
குயில்களின் இன்னிசையில்...
ஆனால் இன்றைய விடியலில்
எனக்கொர் ஆனந்தம்..
நான் இவ்வுலகைக் காண
உயிரை தூசென நினனத்து
என்னை கண்திறக்கை வைத்திட்ட
என் அன்னை பிறந்திட்ட திருநாள்...
நாட்கள் நகர வந்து போகும்
ஓவ்வொரு வருடமும்
நானும் புதிதாய் பிறக்கின்றேன்
என் அன்னையோடு...
ஆசையோடு தேடியலைந்து வாங்கிச்
சேமித்த பரிசில்களோடு காத்திருக்கிறேன்
அன்னையே உன் வருகைக்காய்
என் கனவுகள் - உன்
நிஜத்தோடு சேர்கையில்
என் நினைவுப் பொருளும்
உன் மடி சேர்ந்திடும்
என்றாவது ஓருநாள்...
காத்திருக்கிறேன் கண்களில்
ஆவலோடு
மனதினில் ஆசையோடு....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா
---- எழுதியவர் இனியவள்
எங்கோ படித்தது...