கொத்தனாரின் காதல் கோட்டை
செங்கலானது
அவள் சிரிப்பு...
சிமெண்டானது
அவள் வார்த்தை...
இரும்பானது
அவள் அழகு...
துரும்பானது
என் இதயம்...
தூணானது
அவள் அறிவு...
வீணானது
என் ஆற்றல்...
கடையில்
ஜன்னலாகி
கதவாகி
கோட்டை
ஆன போது....
புல்டோவ்சர் ஆனது
அவள் குடும்பம்....
மண்ணோடு மண்ணாகியது
இந்த கொத்தனாரின்
காதல் கோட்டை........