கேள் நண்பா கேள்

அணையிட்டு தடுக்கிறார்கள் என்று
தயங்கி விடாதே நண்பா..!
அணையிட்ட நீரின் வீரியம்
அதிகம்மென அறிந்துகொள் நண்பா..!
அடிமேல் அடி அடிக்கிறாகள் என்று
அடங்கி விடாதே நண்பா..!
அடிமேல் அடி அடிப்பதினால் தான்
அழகிய சிற்பம் உருவாகிறது நண்பா..!
மறைந்திருந்து தாக்குகிறார்கள் என்று
மடிந்து விடாதே நண்பா..!
மண்ணிட்டு மறைத்திட்டால் தான்
விதை ஓன்று முளைத்திடும் என் நண்பா..!
அனுதினமும் தோல்வி என்று
கலங்கி விடாதே நண்பா..!
அகிலத்தை அழிக்கும் சக்தி
ஆழிக்கும் உண்டென்று அறிந்திடு நண்பா..!
எதிர்காலம் ஒளிர வேண்டுமெனில்
ஆதவனாய் மாறிவிடு நண்பா..!
ஆதவனை தொட்டவன் ஆருமில்லை
என அறிந்து வெல் நண்பா..!