முன்னேற்றம் கவிதை

*
கழுதைக்கு கல்யாணம் செய்கிறார்கள்
நாய்க்கு கல்யாணம் செய்கிறார்கள்
முற்போக்காக சிந்திக்கிறார்கள் மனிதர்கள்..
*
எந்த வேலையும் உருப்படியாகச் செய்யாமல்
அலைந்து அலைந்து எங்கும்
நிற்காமல் ஒடுகின்றன நாய்கள்.
*
வெளியில் போய் வரவே பயம்
அஞ்சுகிறார்கள் மனிதர்கள்
பாதுகாப்பாக இருக்கின்றது நாய்கள்.
*
எப்பொழுது நடந்ததோ தெரியவில்லை
சம்பவம் யாரும் பார்க்கவி்ல்லை
பாதையில் நசுங்கிக் கிடந்தது நாய்.
*
மனிதர்கள் சைகையில் காட்டுகிறார்கள்
வாலையாட்டிக் காட்டுகின்றது நாய்கள்
அன்புடன் நன்றி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (10-Sep-14, 11:34 am)
பார்வை : 298

மேலே