மனிதர்களின் விசித்திரகதை

நேரம் இல்லை என்போர்
வேலைஎன்னவென்று
விசாரித்தால் விந்தை
மனிதர்களின் விசித்திரகதை
பல அறியலாம் பலர் கூடும்
இடமான தேநீர் விடுதியில்
வெட்டி கதை பேசி ஓசி
தேநீர் வாங்கித்தரும் தாராள
குணமுள்ளோரை தேடிக் கழிப்பர்
சிலர் கிரிக்கெட் பற்றித்தெரியா
விட்டாலும் தெரிந்தது போல
அலட்டல் பேர்வழிகள் அதிகம்
ஆரோக்கியம் தருதோ இல்லையோ
ஆர்வம் மிக்க காட்டிடுவார் உடற்பயிற்சி
செய்ய சென்றிடுவர் இல்லாத உடலை
இருப்பதாக எண்ணியே குறைத்திட
வராத வியாதியெல்லாம் வந்ததாக
கற்பனையில் மருத்துவமனையிலே
தவம் கிடப்பர் பணம் படைத்தவர்கள்
அக்கம் பக்கம் வீடு தேடி வேண்டா
கதையில் நாளெல்லாம் ஓட்டிடுவர்
தொலைக்காட்சி நாடகத்தினைப்
பார்த்து தன் வீட்டில்நடப்பதுபோல்
உருகி உணர்ச்சியில் அழுது புலம்புவர்
இதுபோல உபயோகமான செயல்
எப்போதும் செய்திட நேரமுண்டு
வேலை தேடி வாழ்க்கை தரத்தை
உயர்த்தத்தான் பாவம் கடவுள்
இவர்களுக்கு நேரத்தையே தராமல்
தவறு செய்து விட்டார் தண்டனை
யாருக்கென தீர்மானித்தபின்னரே

எழுதியவர் : உ மா (11-Sep-14, 7:29 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 79

மேலே