விடியல்
வானம் பொழிந்து
பூமி நீர் நிறைந்தால்
விவசாயிக்கு மகிழ்வான
விடியல்....!!!!!
விரித்த வலையில்
மீன்கள் பிடிபட்டால்
மீனவனுக்கு மனம்
நிறைந்த விடியல்..!!!
பாசமாக கணவன்
தன்னை அணைத்தால்
மனைவிக்கு அன்பான
விடியல்...!!!!!
பறக்கும் பறவைக்கு
ஒரு பரந்த ஆலமரம்
கண்ணில் பட்டால்
பரவசமான விடியல்...!!!
பட்டாம்பூச்சியோ அமரும்
மலரில் தேன் இருந்தால்
அதுக்கு இன்பமான
விடியல்....!!!!!
பசித்த பாம்புக்கு முன்பாக
தவளை வந்தால் புசிக்க
குஷியான விடியல்...!!!!
படிக்கும் பிள்ளைக்கு
பரீட்சை இல்லை
என்றால் ஆனந்த
விடியல்...!!!
ஆழ்ந்த சோகததில்
அன்னை மடி கிடைத்தால்
அதுவே எல்லை யில்லா
விடியல்...!!!
சாதி மத வேதம்
இல்லாத் திருமணம்
அங்கீகரிக்கப்பட்டால்
உலகுக்கே விடியல்...!!!
உண்மைக் காதல்
நிலைத்து நின்றால்
உறவுக்கே விடியல்...!!!!
ஆண் பெண் வேதமின்றி
இருவரும் ஒன்றென
ஏற்றுக் கொள்ளும் காலம்
வந்தால் மனிதனுக்கு
அன்றுதான் முழுமையான
விடியல்....!!!!