இதுவரைக்கும் புரியவில்லை
உன்
மனம் ஏங்கும்...
தினம் கேட்கும்-
என் நினைவுகள்!
உன்
நிலை தடுக்கும்...
தினம் தவிக்கும்-
உன் கனவுகள்!
ஏனிந்தப் போராட்டம்?
...எனக்கும்தான்!
காலையில் கண் விழித்தால்
வெளிச்சமாய் நீ!
இரவில் இமைகளுக்குள்
இருட்டாய் நீ!
...உனக்கும் நான்!
ஏற்க மறுக்கிறாய்...
உன்னால் முடிவதில்லை!
மறக்க நினைக்கிறேன்...
என்னாலும் முடியவில்லை!
எதிரெதிர் நினைவுகள்
நெஞ்சுக்குள் மட்டும்...
நிகழ்வது என்னவோ....
நெகிழும் மனங்கள்!
...இருவருக்கும் புரிவதில்லை...
27.09.2002