உனக்கும் எனக்கும்

விழிகளின் தேடல் விரும்பிடும் தருணம்
பதினாறினை கடந்த பள்ளியின் பருவம்..

பழகிடும் நட்பு பலவென இருந்தும்
ஈர்த்திடும் பார்வை உணர்ந்தமை அழகே...

விரும்பிய புன்னகை சேர்த்திட நினைத்து
இதயத்தில் புரிதலை கற்றது சுகமே..

அஞ்சிடும் வார்த்தை நெஞ்சினில் புதைத்து
தேடிடும் விழிகளை கடந்தோம் நாளுமே..

ஜன்னலின் ஓரம் கண்களின் வலையில்
சிக்கிட தவித்து சிணுங்கிடும் மனமே...

விடுமுறை தவமதில் பெற்றிடும் வரமது
திறந்திடும் வாசலில் தோன்றிடும் உணர்வே..

காமத்தை வென்ற பள்ளியின் நாட்கள்
இதயத்தை கவர்ந்த பொக்கிஷ நினைவே..!


..கவிபாரதி..

எழுதியவர் : கவிபாரதி (13-Sep-14, 4:10 am)
Tanglish : unakkum enakum
பார்வை : 380

மேலே