அட்டைக்கும் அனுமதி தேவையோ - இராஜ்குமார்

அட்டைக்கும் அனுமதி தேவையோ ?
==================================

கல்லூரி பதிவேட்டின்
அட்டைப் படத்தில்
கல்லூரி எதற்கு ??

அதை தான்
தினமும் ரசிக்கிறேனே ..!

இன்று முதல்
அவ்வட்டைப் படங்களை
அவமதிக்கிறேன்

இனி எனது
பதிவேடுகளின் அட்டையில்
ஒட்டிக் கொள்ளும் உன்முகம்
என் கற்பனை கண்களால்

இதோ பதித்து விட்டேன்
உன் பெயரை
பதிவேடுகளில் பத்திரமாய்

இதற்கும் ..
உன் அனுமதி தேவையோ ?

- இராஜ்குமார்

நாள் :24 - 5- 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (13-Sep-14, 7:19 am)
பார்வை : 78

மேலே