களவு போன நிலவு
![](https://eluthu.com/images/loading.gif)
களவு போன நிலவு
என்னோட நிலவும்
வட்டமாய்தான் இருந்தது
பொட்டு என்ற ஒன்றை
ஒட்டிகொள்ளாதவரை
நிறை குறை காட்டும்
வெண்ணிறம் அது நிலவோடு தேயட்டும்
பயப்பட தேவையில்லை
பாவம் அவள் மாநிறம்தான்
நிலவு பறந்தது கொண்டே
நகரும்
இந்த நிலவு நகரும்
நான் பறப்பேன்
என் நிலவும் காணவில்லை
எவ்வளவு நாளாக என்று தெரியவில்லை
நான் சிரிந்து 7 நாட்கள் ஆகிறது
அப்படியேன்றால்??...
மழையில் குளித்ததோ
பனியில் நனைந்ததோ
இவ்வளவு அழகு
பரவாயில்லை
நிலவே அழகாய் இருந்துவிட்டு போகட்டும்
அவளை காணும் வரை
நிலவு தொலைந்து போனதா
இல்லை தொலை தூரம் போனதா
கொஞ்சம் இருங்கள்
இரவு குழம்பிபோய் உள்ளது
நிழல் அது நீ இருந்தால்தான்
கீழ் விழுவேன் என்றது
நானும் விழுந்துவிடுவேன்
என்ற பயத்தில்
மேற்க்கே போன நீ
கிழக்கே வர காத்திருக்கிறேன்
வழக்கம்போல் வந்துவிடு
என் நிலவை தந்துவிடு....