வர்ணிப்பு

கற்றை கூந்தலை கண்டு - வானில்
ஒற்றை கார்மேகம்
கரையகண்டேன் மழையாக..!

வளையல் ஒளி கீற்று
மழையை முத்தமிட்டது
வானின் வில்லாக - வானவில்லாக..!

விழியழகை காண
வின்னுலுக தேவன்
கண்ணிமைத்தான் மின்னலாக..!

வட்டநிலவும் வான்விட்டு வந்தது
வளர் பிறையும் தேய் பிறையும் இல்லாத - அவளின்
வெளிர் வண்ண முகம் காண..!

கள்ளிசெடியும் காதல் கொள்ளும்
கன்னியவள்
கள்ளிகாட்டில் பிறந்தவரையும்
கவிபேரரசுவாக மாற்றுபவள்..!

வார்த்தைகள் சேர்ந்து
வார்த்தை மறியல் செய்யுதடி
உன்னை வர்ணிக்கும்
என்னை யாரென்று கேட்டு..!

எழுதியவர் : கவிதைநேசன் பிரிதிவி (14-Sep-14, 12:49 pm)
பார்வை : 137

மேலே