கணக்குப் பாடம்

அவள் அம்மா
அறையினுள்
தேவையில்லாத பொருட்களை
கழித்துக் கொண்டிருகிறாள்...
அவள் அப்பா
மாடியில்
எதிர்கால திட்டங்களை
வகுத்துக் கொண்டிருக்கிறார்....
அவள்
தம்பியோ...
நான் கொடுத்த பைசாக்களை
நைசாகக் கூட்டிக்
கொண்டிருக்கிறான்...
அவளோ..
என் எதிரே..
வீட்டைப் பெருக்கிக்
கொண்டிருக்கின்றாள்...
குடும்பமே
கணக்குப் போடுகையில்...
நான் மட்டும்
கணக்குப் பண்ணாமலா
என்ன.!!!