பிரிதிவிராஜ் வி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரிதிவிராஜ் வி |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : 12-Jun-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 168 |
புள்ளி | : 58 |
கணினியாளன் இவன் கவிதைநேசன்
{...... கவிஞர் சினேகன் அவர்கள் சில வருடங்கள் முன்பு ஒரு தனியார்
தொலைகாட்சிக்கு ( நம் இன்றைய சமூகம் சார்ந்து பேசியது ) அளித்த
பேட்டியில் பாதிக்கபட்டு எழுதிய வரிகளில் சில என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன் ......}
முன்னொரு காலத்தில் எல்லாம்
முகவரியை தான் தொலைத்தார்களாம்
அவைகளை தேடவும் செய்தார்களாம்
இன்று நாமோ
முகங்களையே தொலைத்து விட்டு
தேடாமல் இருக்கிறோம்
ஆம் நவீன யுகத்தில் பிரசவித்த
அடுக்குமாடி குடியிருப்புகளில்
அக்கம் பக்கத்தினர் பெயர் கூட ஏன்?
முகம் கூட தெரியாமல்
நான்கு பக்க கல்லறை பிணமென
வாழக் கற்றுக் கொண்டு விட்டோம்
அறிவியலின் வளர்வில் கிடை
என் கிறுக்கல்களைக்கூட கவிதைகள் என்றாய்
நீ என் காதலை கட்டியணைத்தபோது
என் கவிதைகளை கிறுக்கல்கள் என்றாய்
நீ என் காதலை கழட்டிவிட்டபோது
இதற்கு பெயர்தான்
காதலின் தலைகீழ் விதி என்பதோ..! - இல்லை
காளைகளின் தலைவிதி என்பதோ..!
நீ
தீப்பற்றி எரிந்தாலும் உன்னை
திரும்பி பாக்காத சமூகமடா இது
நீ
உயிருக்கு போராடினாலும்
உதவிக்கு வராத
உணர்விழந்த பிணங்களடா
மனிதர்கள்
இதயத்தை பிடுங்கி எறிந்துவிட்டு
இரும்பின் உதவியோடு
உயிர்வாழும் கற்களடா
மனிதர்கள்
மனதினை அழித்துவிட்டு
மரக்கட்டையை மனதாக
வைத்துள்ள சாத்தான்கலடா
மனிதர்கள்
பெண்களை போற்றி
பாதுகாக்கத் தெரியாத
பிசாசுகளடா மனிதர்கள்
அடுத்தவர்களின் ஏக்கத்தை
அறிய முடியாத
அரக்கர்களடா
மனிதர்கள்
என்
தோழர்களே
தோழிகளே
நாமாவது
வாழ்ந்து காட்டுவோம்
மனிதர்கள் எப்படி
வாழவேண்டுமென்று..........
இன்றைக்கு இரவு..
எப்படியாவது
இவன் குரல்வளையை
நெரித்திட வேண்டுமென
அவர்கள் போட்ட திட்டம்..
இவன் வீட்டை சுற்றி சுற்றி வந்து
வேவு பார்த்து ..
விடியற்காலை நேரத்தில்
பக்கத்து மாடிப்படியேறி
மதில் தாண்டி
இவன் உயிர் குடிக்க
முடிவு செய்த காரணம்..
வீட்டுக்கு காவலும்
அதிகப்படியான செல்லமும்
தந்த மமதையால்
எப்போதும் வெறியேற்றி
குரைப்பதே இவனுக்கு
வேலை என்பதுதான்..!
எங்கள் நாய்க்குட்டியின்
சாமர்த்தியம் தெரியாமல்
இப்படியொரு..
திட்டமிட்ட தெரு நாய்களை
நகராட்சி வண்டி வந்து
அள்ளிக் கொண்டு போனபின்
முகமெல்லாம் பூரிப்பு ..
இவனுக்கு!
தலிபான்களே
தலை குனியுங்கள்....!
பெஷாவரில்
மனிதத்தை தொலைத்தவர்களே....!
இதோ, இந்த இஸ்லாம்
சகோதரினிடம் உள்ளது
எடுத்துகொள்ளுங்கள்....!
மதங்களின் பெயர்
சொல்லி....!
துப்பாக்கி தூக்கும்
துர்ப்பாக்கிய
கயவர்கள் அங்கே....!
மனிதநேயம்
உருகி
தூக்கு தூக்கும்
மனிதம் இங்கே....!
நீ குரானைப்
படித்தாயோ இல்லையோ....!
அதன் எல்லா பக்கங்களிலும்
நிறைந்து இருக்கிறாய்.....!.
ஐயப்ப ஆன்மீக
அன்பர்களுக்கு.....!
அன்னமளித்து
அண்ணனாகிய
அன்பின் அடையாளமே.....!
நீ அளிக்கும்
ஒவ்வொரு
அன்னப்பருக்கையிலும்....!
அல்லாவை
காண்கின்றோம்....!
இந்துவையும்
இஸ்லாமையும்
இடைமறித்து....!
ஈனச்செயல் புரிய
மானுண்டெஞ்சிய கழிலி நீர் போலே
என் காதல் தேங்கிக்கிடக்குதே
புள்ளிமான் அவள்
என் நெஞ்சை அள்ளி பருகி
பின் நஞ்சை அதில் தடவி சென்றாளே
மஞ்சம் தவிர்த்து
நெஞ்சம் நிமிர்த்திய என் காதலை
வஞ்சம் செய்து சென்றாளே
நித்தம் நித்தம் முத்தம் தந்து
சத்தம் இல்லாமல் காதல் செய்தவள் - இன்று
என் சித்தம் அதை பித்தம் பிடிக்க செய்தாளே
பகல் கனவாக என் காதல்
பலிக்காமல் போனதே
பாவையவள் மணமாகி சென்றாளே
பாவி இவன் தன்னுடல்
எரித்து கொண்டானே - பாவிமகள்
நினைவலைகள் எரித்ததால்..!
காதலில் தோல்வி பெற்று - இன்று
கல்லறையில் கண்மூடிகிடப்பேன்
என்றரிந்திருந்தால் - அன்றே
கரைந்திருப்பேன் கருவறையில்..!
என் தாயும் இருந்திருப்பாள் இந்த தரணியில்
எனை பிரசவித்து பின் சவமாகி போகாமல்..!
தன்னம்பிக்கை இல்லாத
கோழைகளின் இதய வாசலில்
தைரியமாக நிற்கிறான் - வஞ்சகனவன்
வாஞ்சையோடு வரவேற்கிறான்
மரனவாசலுக்கு - அவன் பெயர்
"தற்கொலை"
(காதல் தோல்வியால் என் தோழி ஒருவர் எடுத்த தவறான முடிவில் தோன்றிய வரிகள்)
தண்ணீர்தானே
நான்
கேட்டேன்
தவியாய்
ஏன்
தவிக்க வச்ச ?
நீர்தானே
நான்
கேட்டேன்
நிழலாய்
ஏன்
பின் தொடர்ந்த ?
தனியாக
நான்
இருந்தும்
உன் நினைவோட
ஏன்
புலம்ப வச்ச ?
பனியாக
என்மேல்
நீ
மாறி..மாறி
ஏன்
பொழிஞ்ச ?
கதைகேட்டு
நான்
திரிஞ்சேன்
எனை
கவி எழுத
ஏன் வச்ச ?
காவியமான
உன்
காதலுக்கு
அச்சாரம்
ஏன்
அமைச்ச ?
விழிப்பார்வை
வீசிப்புட்டு
உன்
விலாசத்த
ஏன்
மறைச்ச ?
விபத்தாக
நீ
நுழைஞ்சு
ஏன்
விபரீதம்
ஆகிபுட்டே?
விண்மீன்போல்
என்
நெஞ்சில்
மின்னி...மின்னி
ஏன்
மறைஞ்ச ?
கண்மீனின்
காட்சிகளாய்
என்
கருவிழிக்க
புதிது புதிதாக
கண்டுபிடிக்கிறேன் என்கிறாய்...
எதை
கண்டு பிடித்தாய் நீயாக...
அவன் காட்டித் தராமல்!
;
;
புதிது புதிதாக
படைப்புகள் படைக்கிறேன் என்கிறாய்....
எதை
படைத்து விட்டாய் நீயாக...
அவன் படைத்திராத ஒன்றைக் கொண்டு!
/
/
ஒன்றை மறைத்து வைத்தலே
கண்டுபிடிக்க காரணியும், காரணமும்;
கண்டு பிடித்தலுக்கான தூண்டல்
மறைத்து வைத்தல்....
/
/
நீ
கண்டு பிடித்ததையும்
படைத்ததையும்
உண்மையாக கண்டும், படைத்ததும்
நீயா...
/
/
நீயென்றால்
நீயாக படைத்தது எது...
முன்னர் படைத்த எதைக் கொண்டும்
அல்லாமல்...
/
/
அல்லாமல்
படைத்தாயென்றால்
நீ
படைப்பாளி.....
/
/
உன்னால் செய்யப்பட்டதெல்லாம்
தீயைத் தீ சுடுவதில்லை
கெட்டவர்க்குக் கேடு வருவதில்லை
பாவத்திற்கு உண்டு பரிகாரங்கள்
புண்ணியம் தேடிடப் பலவழிகள்
ஆதலினால் கெட்டவர்கள் திருந்துதற்கு
இவ்வுலகில் வழியேதும் இல்லவே இல்லை.
உன் காதலியை
உண்மையாய்
நீ நேசித்துப் பார்...
அவள் உன்னை
காதலிக்கவில்லையென்றாலும்
கவிதைகள் உனை
காதலிக்க ஆரம்பித்து விடும்...!