மானுண்டெஞ்சிய கழிலி நீர்

மானுண்டெஞ்சிய கழிலி நீர் போலே
என் காதல் தேங்கிக்கிடக்குதே
புள்ளிமான் அவள்
என் நெஞ்சை அள்ளி பருகி
பின் நஞ்சை அதில் தடவி சென்றாளே

மஞ்சம் தவிர்த்து
நெஞ்சம் நிமிர்த்திய என் காதலை
வஞ்சம் செய்து சென்றாளே

நித்தம் நித்தம் முத்தம் தந்து
சத்தம் இல்லாமல் காதல் செய்தவள் - இன்று
என் சித்தம் அதை பித்தம் பிடிக்க செய்தாளே

பகல் கனவாக என் காதல்
பலிக்காமல் போனதே
பாவையவள் மணமாகி சென்றாளே

பாவி இவன் தன்னுடல்
எரித்து கொண்டானே - பாவிமகள்
நினைவலைகள் எரித்ததால்..!

எழுதியவர் : கவிதைநேசன் பிரிதிவி (27-Dec-14, 11:17 am)
பார்வை : 262

மேலே