ஏதேதோ உளறுகிறேன்

வயதாகி போனது
கற்பனையின்
சாரல்
எழுதி எழுதி
அலைகிறேன்
வார்த்தை கிடைக்கவில்லை,

அவளால்
உலகின்
சப்தங்கள் கூட
ஒளிந்துகொண்டது,

வார்த்தையின்
வறட்சி
அவளை பார்த்து பார்த்து
தவிக்கிறேன் ,

பேசுகிறேன் ஆனால்
புரியவில்லை
புதிதாய்
ஒரு வாசனை வந்து போகிறது ,

ஏதேதோ
உளறுகிறேன்
அதை கவிதை என்கிறாய்

உன் பெயரை
சொல்கிறேன்
கவிதை சொல்ல சொல்கிறாய்

கவிஞன் என்ற
கனவை தூக்கி எரிகிறேன்..

எழுதியவர் : ரிச்சர்ட் (26-Dec-14, 3:14 pm)
பார்வை : 388

மேலே