அவளின் முதல் ஏமாற்றம் -சகி
@@ஏமாற்றம் @@
தாய்மாமன் மகளென்று
அத்தை மகன் அவன்
ஆசை வார்த்தைகளை
காதல் வசை பாட ...
அத்தை மகனென்று
அன்புடன் அவள் பழக
அவன் சாயம் வெளுக்க ....
சொந்தத்திலே இன்னொரு
வசதியான மாமன் மகளுக்கு
மணமாலை சூடி மணமகனான்....
அவளோ உணர்ந்தாள்...
பணம் ,படிப்பு ,அந்தஸ்த்து
முக்கியத்துவம் கொடுத்து விட்டுசென்ற
பச்சோந்தி அத்தைமகனின் உண்மை
குணநலன்களை அறிந்தாள்...
மனதில் சந்தோசம் கொண்டாள்
உண்மையில்லா உறவை நம்பி
வாழ்க்கை தடுமாறவில்லை என்று....
முடிவு எடுத்தாள்...
உறவுகள் முன்னினையில்
முன்னேறி காட்ட வேண்டுமென்று ...
முன்னேறிக்கொண்டே இருக்கிறாள்
கன்னியவள் வாழ்வில்.....