மனிதம் இங்கே

தலிபான்களே
தலை குனியுங்கள்....!
பெஷாவரில்
மனிதத்தை தொலைத்தவர்களே....!
இதோ, இந்த இஸ்லாம்
சகோதரினிடம் உள்ளது
எடுத்துகொள்ளுங்கள்....!

மதங்களின் பெயர்
சொல்லி....!
துப்பாக்கி தூக்கும்
துர்ப்பாக்கிய
கயவர்கள் அங்கே....!
மனிதநேயம்
உருகி
தூக்கு தூக்கும்
மனிதம் இங்கே....!

நீ குரானைப்
படித்தாயோ இல்லையோ....!
அதன் எல்லா பக்கங்களிலும்
நிறைந்து இருக்கிறாய்.....!.

ஐயப்ப ஆன்மீக
அன்பர்களுக்கு.....!
அன்னமளித்து
அண்ணனாகிய
அன்பின் அடையாளமே.....!

நீ அளிக்கும்
ஒவ்வொரு
அன்னப்பருக்கையிலும்....!
அல்லாவை
காண்கின்றோம்....!

இந்துவையும்
இஸ்லாமையும்
இடைமறித்து....!
ஈனச்செயல் புரியும்
கயவர்களுக்கு....!
இந்த படம்
ஒரு பாடம்....!

இதயங்கள் ஒன்று சேர்ந்தால்
ஜாதியென்ன மொழியென்ன
மனிதநேயம் மடைதிறந்தால்
மதமென்ன மடமென்ன

வெண்ணிற உடையில்
வெள்ளை மனதுடன்
வெண்பனி காலத்தில்
வென்றுவிட்டாய்
பலகோடி இதயங்களை.

இதுதான் சமயம்....!
இதுதான் மதம்....!
இதுதான் ஆன்மீகம்....!
இதுதான் கடவுள்.....!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (27-Dec-14, 1:50 pm)
பார்வை : 103

மேலே