வானவில் வர்ணஜாலம்
( பேருந்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவன், ஒரு நிறுத்தத்தில் அழகான கல்லூரி மாணவி ஏறுவதை பார்க்கிறான்., ரசிக்கிறான். அவள் இறங்குமிடம் ஐந்து நிமிட பயணம். ஆனால் அவனுக்கு தெரியாது. அவள் இறங்கியதும், அவளை ரசித்த அவன் மனதில் தோன்றிய கவிதை!... )
ஊதா நிறத்தோட்ட முகம்;
கருநீலக் கூந்தல்;
நீலநிற விழிகள்;
பசுமைவள இளமை;
மஞ்சள்நிற மேனி;
ஆரஞ்சுக் கன்னம்;
சிவப்புக்கோவை இதழ்;
மொத்தத்தில்,
சில நிமிடங்கள் மட்டும்
என்முன் தோன்றி மறைந்தாள்.
வானவில்லாய்!!

