சுனாமி
உயிர் வளர்த்த உப்பு நீர்....
உயிர் எடுத்த நாள் இன்று...!
பெற்றோர் பிள்ளையை இழந்தனர்...!
பிள்ளைகள் பெற்றோரை இழந்தனர்...!
அன்னமிட்ட கடல் அன்னை
காவு வாங்கியது உயிரை மட்டுமா
உடமைகளுடன் உறவுகளையும் தானே...!
பொங்கி எழுந்தது போதும் அம்மா....!
உன் பிள்ளைகளை வாழவிடு
இல்லையேல் மொத்தமாய் அழித்துவிடு.....!