மார்கழி மாத மாயாஜாலங்கள்
மார்கழி மாதம்
மகளிர் கைகளில்
மாவுத் துகள்கள்....!
மண்டியிட்டு
மண் மேல் படைக்கும்
மாக்கோலங்கள்....!
புள்ளிகளை கோடுகளால்....!
மதிகொண்டு மடக்கும்
மங்கையரின் திறமை....!
முழு வடிவம் பெற்றதும்
முகம் நிறைந்த மகிழ்ச்சி....!
பூபாளம் பாடும் நேரத்தில்....!
பூலோகத்தில்....!
பூவையர்கள் படைத்த
பூசனி
பூக்கோலங்கள்....!
முன் பனி நேரம்....!
பணியை முடக்கும்
பனிப்புகைகள்....!
பனிபுகையையும் ஊடுருவி....!
ஞானக்குரலால்
பாடும் பஜனை கானங்கள்
சிலு சிலுக்கும் உடல்....!
இருந்தும் நீராட
துடி துடிக்கும் மனம்....!
பட படக்கும் பற்கள்....!
இருந்தும்....!
பரமனை புகழ்ந்து
பாட துடிக்கும்
பக்திப்பரவசம்....!
நடுங்கும் குளிர்....!
இருந்தும்....!
கோயில்களில்
கோஷ்டி கானங்கள்....!
திரும்பும் திசையெல்லாம்.....!
ஆண்டாளின்
திருப்பாவை பாடல்கள்....!
நெய் ஒழுகும் சக்கரைப் பொங்கல்....!
தேன் ஒழுகும் பக்தி பாடல்கள்....!
மனம் உருகும் மந்திரங்கள்....!
வீதியெங்கும் வண்ணக்கோலங்கள்....!
அரங்கமெங்கும் இசை கச்சேரிகள்....!
சாணத்தால் வாசல் தெளித்து....!
வர்ணஜாலத்தால் கோலமிட்டு....!
ஞானத்தால் இசை பொழிந்து....!
பண்டத்தால் படையலிட்டு....!
பக்தியால் பாசுரம் பாடி....!
இவையாவும்....!
மார்கழி மாதத்தால்
மனதை மயக்கும்
மாயாஜாலங்கள்....!