காதலாகி கசிந்துருகி

தண்ணீர்தானே
நான்
கேட்டேன்
தவியாய்
ஏன்
தவிக்க வச்ச ?

நீர்தானே
நான்
கேட்டேன்
நிழலாய்
ஏன்
பின் தொடர்ந்த ?

தனியாக
நான்
இருந்தும்
உன் நினைவோட
ஏன்
புலம்ப வச்ச ?

பனியாக
என்மேல்
நீ
மாறி..மாறி
ஏன்
பொழிஞ்ச ?

கதைகேட்டு
நான்
திரிஞ்சேன்
எனை
கவி எழுத
ஏன் வச்ச ?

காவியமான
உன்
காதலுக்கு
அச்சாரம்
ஏன்
அமைச்ச ?

விழிப்பார்வை
வீசிப்புட்டு
உன்
விலாசத்த
ஏன்
மறைச்ச ?

விபத்தாக
நீ
நுழைஞ்சு
ஏன்
விபரீதம்
ஆகிபுட்டே?

விண்மீன்போல்
என்
நெஞ்சில்
மின்னி...மின்னி
ஏன்
மறைஞ்ச ?

கண்மீனின்
காட்சிகளாய்
என்
கருவிழிக்குள்
ஏன்
நுழைஞ்ச ?

நீர்போல
என்மனச
சிறு
கல்லெறிஞ்சு
ஏன்
கலச்ச ?

கலங்கடிச்ச
பின்னாலும்
எனை
தெளியாம
ஏன்
பார்த்துக்கிட்ட?

மூக்குவழி
மூச்சுக் காற்றாய்
ஏன்
முட்டி ...முட்டி
நீ
புகுந்த ?

முழுவதும்
என்னுள்
புகுந்துகிட்டு
மூச்சு விட
ஏன்
மறந்த ?

கானல் நீராய்
என்
கண்ணெதிரில்
வந்து ..வந்து
ஏன்
விழுந்த ?

காணமல்
போனாலும்
என்
கனவுகளை
ஏன்
சுமந்த ?

நெருப்புபோல
நான்
இருந்தேன்
சுருக்கு போட்டு
ஏன்
இழுத்த ?

தீயாக
சுட்டாலும்
எனைச்
சுடராக
ஏன்
நினைச்ச ?

மின்சாரம் போல்
என்
நெஞ்சை
அதிர்வுகளால்
ஏன்
அசைச்ச ?

சம்சாரம்
ஆகும்முன்
எனை
சாகாமல்
ஏன்
சாகடிச்ச ?

முன்ஜென்ம
பலனால்
என்மேல்
நீ
முழுப்பார்வை
வீசிபுட்ட...

சோகமான
என்
நெஞ்சில்
இப்ப
சுகராகம்
ஏற்றிப்புட்ட...

புடம் போட்ட
தங்கம்
போல்
புதுப்பொண்ணு
நீ
கிடைச்சா...

ஒருஜென்மம்
மட்டுமல்ல
பலஜென்மம்
நான்
வேண்டி
நிற்பேன் ...

உன் பார்வை
பட்டு
பசிமறப்பேன்
காலமெல்லாம்
நான்
காத்திருப்பேன் ...

கணவனாய்
உன்கரம்
பிடிக்கும்
நல்ல
காலங்கள்
கனிந்து விட்டால் ...

சரிபாதி
உடல்தந்த
சாமிபோல்
நாம்
உரு
மாறி ?

ஒர்வுயிராய்...
ஒர்வுடலாய்...
ஒன்றாக கலந்திடுவோம்
ஒலகத்த மறந்திடுவோம்

____________________________

குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (23-Oct-14, 12:28 am)
பார்வை : 296

மேலே