எப்பொழுது அறிவாயோ
எதிர் பார்க்கவில்லை நீ
என்னோடு வருவாயென்று !
எங்கு சென்று ஒளிந்துகொள்வேன் உன்
இதயத்தில் இடம்கிடைக்காதபோது !
என்ன பேசுவது ! எப்படி பேசுவது !
வேண்டாம் ஏதும் பேசிவிடாதே நீ !
உன் மௌனமெனும் கோடிட்ட இடங்களை
நானே நிரப்பிக் கொள்கிறேன் !
பத்து நிமிடம் இருக்கிறது
இப்பயணம் முடிய !
பாடாய் படுத்தும் உன் பார்வையின்
அர்த்தம் சொல்லிவிடேன் எனக்கு !
பகிரங்கமாய் என் காதல் சொன்னபின்பும்
சந்தேகம் உன் பதிலால் !
நடக்குமோ ! நடக்காதோ !
நம் திருமணம் !
நடந்தால் உன்னோடு ! இல்லாவிடில்
உன் நினைவோடு !
வாழ்கிறேன் வா பெண்ணே
என் வாழ்வின் வசந்தமும் என் கவியின் சந்தமும்
நீஎன்பதை எப்பொழுது அறிவாயோ !