கருத்திலே பூத்தது-209494-,206388-க்கு
209494- கவிதையின் கருத்திலே பூத்தது....
வேண்டுதல்....
வெயிலில் நின்று பிடிக்கும்,உன்
விளக்கும் எதனை விளக்குமோ?
கையினில் பிடித்த விளக்கும்,அக்
கருவறைக் கடவுளைக் காட்டுமோ?
மெய்யினில் கல்வி விளக்கினை
முயன்றுமே ஏற்றிப் பார்த்திடு!
பொய்யினை விலக்கிப் போட்டது
புதுவழி கூட்டும் உணர்ந்திடு!
========== =======
206388-முகிலின் கவிதையின் கருத்தில்...
எனக்காக வாழ்கிறேன் இனி! -முகில்!!
வார்த்தைகளை நம்புவது நம்தவறு!
வாழ்ந்துகாட்டி வெல்லும்வழி இனிநமது!
கோர்த்து,நிற்கும் கண்ணீரைத் துடைத்து,எறி!
கொள்கை,பிறர்க்கு உதவுவதாய் எண்ணி,முடி!
ஆர்த்தெழும்,எக் காதலுமே அன்பின்,வழி!
அடுத்தவர்கள் மகிழ்வதற்கு,உன் பங்கை,அளி!
வேர்த்து,ஒதுங்கி ஓடாமல், நின்று,விழி!
வேதனைகள் சகஜம்,அவை கொன்று,அழி!
===== =======