பொக்கிஷ பெட்டகம்

..."" பொக்கிஷ பெட்டகம் ""...
தென்றல் தீண்டும் மாலைநேரம்
மௌனமாய் இயற்கையை ரசிக்க,
பூமியின் சுழற்சியால் சூரியன்
மெல்ல மெல்ல மறைகின்றான்..
உடல் சிலிர்ப்பது போல் ஓர் உணர்வு ..
கைகளின் ரோமம் எழுந்துநிற்க,
தியானத்தில் கிடைக்காத அமைதி
என் உள்ளத்து கதவை தட்டின..
எண்ணத்து சாரளத்தின் ஊடே
எட்டி பார்க்கையிலே, தொட்டன
இனம் புரிந்துகொள்ள முடியாத
என்னில் ஏதோ சில மாற்றங்கள் ...
சிந்தனை தூரத்திற்கும் அப்பால்
கற்பனையிலும் காணகிடைக்கா
பொக்கிஷம் என்முன் பெட்டகமாய்..
சொல்வதறியா மெளனமானேன்
ஆனந்தம் கண்களை மறைத்திடும்
சுகமான இளஞ்சூடு கண்ணீராய்
இன்பங்கள் என்னை தழுவிடவும்
உறக்கம் விழிக்க கனவு சென்றது ,,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..