அன்புள்ள நியந்தாவுக்கு 10-இளகிய மனம் உள்ளோர் படிக்க வேண்டாம்
தட்ட தட்ட கிட்ட கிட்ட.. சத்தம், எட்ட எட்ட... உள்ளுக்குள் யுத்தம் முட்ட முட்ட... நானும் சிந்தாவும்... பயந்தபடியே கதவினருகே சென்றோம்... சட்டென திரும்பி பார்த்தேன்...
காவ்........ கியாவ்.... என்ற நொடிப் பார்வையில் சர்ரென்ன பின்னோக்கி பயந்து போய் சுவரோடு ஒட்டி நின்றது சிந்தா....
தமிழ் ஹீரோ வெற்றிக் களிப்பு புன்னகையுடன் சட்டென மாற்றிய முக பாவத்துடன் கதவைப் பார்த்தேன்... கண்டினியுட்டி இல்லாத 80 களில், ஏன் இப்போதும் கூட வரும் சில படங்கள் போல பயந்தபடியே கதவின் தாழ்ப்பாளைத் திறந்தேன்...
விடிகாலைக் கீற்றுக்கள் விளக்கேற்றியது போல... இருந்தும் நெடும்பசியில் இரவு இன்னும் தன் வாய் மூடாமல் ஆங்காங்கே குளிரை போர்த்திக் கொண்டு இருந்தது....
சில் அவுட் ஷாட் டில் கூட்டமாய் நிற்பது போல கண்கள் பிழையானது.. கசக்கிய தாமதத்தில் இருவர் ஒரு சேர உள்ளே வர.. பின்னால் ஒருவர் பூனை போல் தொடர்ந்தார். பூனை ஒன்று கத்திக் கொண்டே சிந்தாவை மிரட்டி இருக்க வேண்டும். சிந்தாதான், பூனை போல் கத்தியது என்று என் வீணாப் போன கற்பனை காகத்தை கரையச் சொல்லி கேட்டதாக பழங்கதை சொன்ன ஒரு 70 அடி கிணறுக்குள் ஒரு தலை மட்டும் நீந்தியது...நீந்தியதை எட்டிப் பார்த்த என் தலையை ஒரு தலை நிமிர்த்திப் பார்ப்பதாக, மூவரில் ஒருவன் மிக அருகில் வந்தான். கதவு தானாக மூடிக் கொண்டது. அறைக்குள் இள வெளிச்சம் மட்டுமே. என் எதிரில் மூவரும் வட்டமாய் அமர்ந்தார்கள். தாங்கள் கொண்டு வந்திருந்த பேக்கை திறந்தார்கள்...
அவர்களின் கண்களில் ஆயிரம் பூனைகளின் கூச்சலைப் பார்க்க முடிந்தது....
இப்போது என் கன்னத்தருகே முகத்தை நீட்டிக் கொண்டு சிந்தா குத்த வைத்து அமர்ந்திருந்தது.
அறைக்குள் திடும்மென கடுங்குளிர் அடித்தார் போல மூவரும் நடுங்கினார்கள். தெரியாத தூரம், கலையாத மேகம் என ஒரு கோட்டோவியக் காட்டுக்குள் நுழைந்து விட்ட அச்சம், இலைகளாய் உதிரத் தொடங்குவதாக கதை சொல்லும் ஆற்றின் நிழல் ஒன்று வளர்ந்து கொண்டே போவதைப் போல அறையின் விஸ்தீரம் விரிந்து கொண்டே சென்றது......
நான் அவர்களை உற்றுப் பார்த்தேன். அவர்கள் எதிர்த்து கூர்ந்து கவனித்துக் கொண்டே, பேக்கில் இருந்த இருகாலையும் இரு
கையையும்.....வயிற்றுப் பகுதியையும்........ விரல்களின் கொத்தை தனியாக ஒரு கவருக்குள்ளும்....இன்னும் இன்னும் அடுத்தடுத்த பாகங்களை அழகாக மிக நேர்த்தியாக வெட்டி கச்சிதமாக பார்சல் செய்யப்பட்டு, மூன்று பேக் முழுக்க அடுக்கப்பட்டு, ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருந்தார்கள்.
நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்.. அடுத்து தலைப் பகுதியை வெளியே எடுக்க முயற்சித்தான் ஒருவன்.....
என் காதருகே....(எழுதும் போது என் உடல் நடுங்கியதை சிந்தா கவனித்திருக்க கூடாது.....) ஆஆஆஆஆஆஆஆ..............க்க்க்க்க்க்.................ஆஆஆஆஆஆஆஅ...... மேல் மூச்சு மட்டுமே வருகிறது. உச்சஸ்தாயில் அழுகை ஆங்காரமாய் மேல் நோக்கி போய்க் கொண்டே இருக்க.... நான் பட படவென திரும்பினேன்.... திரும்பி எப்படி தெறித்து எதிர் சுவரில் விழுந்தேன் என்று தெரியவில்லை.
"அயோ அயோ.... அயோ.... அயோ... அயோ.... அயோ,.......... **************** ************ ************* **************** என் உடம்பை இப்பிடி வெட்டிடீங்கலேடா.... ......******* **** ******* அயோ.. அயோ" என கத்திக் கொண்டே என்னைத் துரத்த தொடங்கியது சிந்தா.... அந்த சிறுவர்கள் மூவரும் நான் மட்டும் தனியாக வீட்டுக்குள் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்து... புன்னகைக்கத் தொடங்கினார்கள்.
"சரிங்கணா..... நாங்க ஸ்கூலுக்கு போகணும்.... மிச்சத்தை நீங்க பார்த்துக்கோங்க... கிளம்பறோம்...." என்று கிளம்ப யத்தனித்தார்கள்...
மூச்சு வாங்கிக் கொண்டே.... "சரிங்க டா... பார்த்துப் போங்க...."என்றேன்
"சரிங்ணா.... நியந்தாக்காவ கேட்டேன்னு சொல்லுங்க... "என்றபடியே அவர்கள் சென்று விட....நான் சிந்தாவின் பக்கம் திரும்பினேன்...
சிந்தா மூலையில் சுவரோடு அமர்ந்து அழுது கொண்டிருந்தது...
"என்ன, விரட்ட முடியலையா.... சாத்தானுக்கு அவ்ளோ தான் சக்தி....*************** .... என்னை பாக்கற... உனக்கு மட்டும் தான் கெட்ட வார்த்தை பேச தெரியுமா... எனக்கும் தெரியும்.. நீ படிச்ச அதே ஸ்கூல் தான் நானும் படிச்சேன்.... நாங்கெல்லாம் பேச ஆரம்பிச்சா நீங்கலாம் கேக்க முடியாது....
கடவுள் ஓடுவான். ஆனா கடைசில அவன் தான் விரட்டுவான். ஏன்னா கடவுள் சாத்தானோட புள்ளடி.."
"உன் வசனத்தை எத்தன வருசத்துக்கு வேணும்னாலும் கேக்கறேன்... என் உடம்ப குடுத்துரு...... உடம்பு பொக்கிஷண்டா....... உன்ன மாறி காதலிச்சே சாகர நாய்களுக்கு அதோடு ஆழம் புரியாது.... ஆழ் மனசுக்குள்ள அவ கூட புனரனும்னு ஆசை மரமா வேர் புடிச்சு வளந்து நிக்கும்.. பாழாப் போன காதல்னு நீங்களா சொல்லிக்கற கருமாந்த்ரத்துனால, பல்ல கடிச்சிட்டு முத்தத்துக்கு சாவீங்க... காமம் ஒரு கோயில்டா... உடம்பு கருவறைடா.....நரம்பும் சதையும் எழும்பும்,ரத்தமும், இதயமும் மூளையும், அது இதுன்னு எல்லாம் சேர்த்து அழகா அம்சமா ஒரு நிர்வாணம் அப்டி 6 அடிக்கு நிக்குதே.. எப்புடி.... இயற்கைடா....... கலவிக்காகவே தாண்டா இந்த பொறப்பு.... உன்ன மாதிரி புரியாத முட்டாள்கள்.... தானும் படுக்காம தள்ளியும் படுக்காம...." சிந்தா பேசுவதை நிறுத்தி விட்டு மீண்டும் கதறியது.....
நான் சிந்தாவின் உடலை சுடுதண்ணியில் போட்டு வேக வைத்து வேக வைத்து என் நெஞ்சளவுக்கு நின்று கொண்டிருந்த இரண்டு நாய்களுக்கு உணவாக (பாவம் இரண்டு நாள் பட்டினி வேறு நாய்கள்- எல்லாம் முன்னேற்பாடு தான்) போட்டுக் கொண்டே இருந்தேன்.... கீழே படுத்து உருண்டு மிரண்டு அழுது துடித்தது...சிந்தா
"அதுக்கு...... அதுக்கு ஊர்ல இருக்கற 14,15 வயசு பசங்க, புள்ளைங்கள கடத்திட்டு போய் விடிய விடிய நாசம் பண்ணுவியா.. உன் காமம் இதைத் தான் சொல்லிருக்கா.... வலிக்காம பொண்ண தொடணும்.... சலிக்காம ஆணை தொடணும்... காமத்த பத்தி எங்க அய்யா வள்ளுவன் சொன்னதெல்லாம் உனக்கெப்டிடி புரியும் காட்டேரி...லஞ்சம் குடுத்து போலிஸ் ஆணவ தான..."என்றபடியே தலை பாகத்தை எடுத்து கண்களை பிடுங்கினேன்...... சிந்தா தன் கண்களைப் பிடித்துக் கொண்டு புரண்டது....
நாய்களின் வயிறு மேலெழும்பும் குளமாக மெல்ல மெல்ல நிறைந்து கொண்டிருந்தது...கொஞ்சம், வேக கஷ்டமாக இருந்த பகுதிகளை மிக்ஸ்யில் போட்டு அரைத்து கூழாக்கி நாய்களுக்கு ஊற்றினேன்.... நிதானமாக செய்வதில் ரத்தத் தடையங்ககளை அழகாக ஒரு குண்டாவில் பிடித்து கழிவறைக்குள் ஊற்ற முடிந்தது.... சிந்தாவின் முகம் கோணியது.... சுவற்றில் முட்டிக் கொண்டு தன்னை இன்னும் இன்னும் விகாரமாக்கியது..... அறையின் குளிர் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருந்தது....
"பால்வீதியில் பயணிக்கத் தொடங்கி விட்டேன் முட்டாளே..... என் நரம்புகளின் முடிச்சு சங்கமிக்கும் அந்த பகுதியையாவது கொடுத்து விடு...... நான் மறந்து தொலைகிறேன்.... "என்று கெஞ்சியது..
"எதற்கு?..... பால்வீதியில் முகாமிற்றுக்கும் ஏதாவது ஒரு கடவுளை மடக்கவா..." என்ற படியே கடைசியாக அதையும் தூக்கி நாய்க்கு போட்டேன்....
மனசு கொஞ்சம் கனக்கத்தான் செய்தது ....
என்ன செய்ய ..............பாவத்தின் சம்பளம் மரணம்...
"பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா...
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா...."
தூரத்தில் ஏதோ அலைவரிசையில் பாடல் வரிகள் யாரையோ விரட்டிக் கொண்டிருந்தன......
சிந்தாவின் கடைசி பெருமூச்சு அணத்திக் கொண்டே சுவருக்குள் ஊடுருவி காற்று வெளியில் பிரபஞ்சத்தில் கலக்கத் தொடங்கியது........
அறையை சுத்தம் செய்து பூட்டி விட்டு என் படுக்கை அறைக்கு வந்தேன்....
மேசையில் பிரிக்காமல் ஒரு கடிதம்....
எடுத்துப் பார்த்தேன்.......
நியந்தா எழுதிருக்கிறாள்......
கண்கள் விரிய கடிதத்தைப் பிரித்தேன்.....
கவிஜி
நியந்தாவின்.... தரிசனம்....... அடுத்த அத்தியாயத்தில்.........(அன்புள்ள நியந்தாவுக்கு 12)