சரக்கில் உளறிய கதை – முதல் பாகம்

சரக்கில்; உளறிய கதை! – முதல் பாகம்
இடம் : டாஸ்மாக்
நேரம் : நிகழ்காலம்
பாத்திரங்கள் : பாட்டில், ஆம்லட், மூட்டைப்பூச்சி, போதையில் உளறுவோர்.
மங்குனி : தம்பி!! ஒரு பீர்!
பையன் :என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க? மூஞ்சி டல்லா இருக்கு?
மங்குனி : அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!
பையன் : பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!
மங்குனி : அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா..
பையன் : போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?
மங்குனி : அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!

எழுதியவர் : ஜார்ஜ் (16-Sep-14, 7:13 pm)
சேர்த்தது : ஜார்ஜ் தமிழா
பார்வை : 217

சிறந்த நகைச்சுவைகள்

மேலே