மாற்றங்கள் சில ஏமாற்றங்கள் பல
அடடா அடடா அருமையடா
அழகு கூந்தல்நீளம் காண்பது
அரிதானதடா மங்கை இவள்கள்
அதிசயப் பெண்களடா பாராட்ட
வேண்டுமடா...!!!
ஆடை பாதி ஆள் பாதி
ஆனாலும் முடிநீளம்
ஆனதடா எனக்கும்
ஆச்சரியம் தோனுதடா..!!
இடையைக் குறைத்து
இளம் பெண்கள்
இயற்கை வளர்ச்சியை
இயன்றவரை மாற்றுதடா..!!!
ஈவிரக்கம் அற்ற உலகமடா
ஈயாட்டம் பெண் இருந்தாலும்
ஈஎன்று பல்லைக் காட்டும் சில
ஈனப்பிறவியும் உண்டுடா....!!!
உலகமாற்றம்கண்டதடா
உண்மைஅது மறைந்ததடா
உரிமையும் தடம் மாறுதடா
உள்ளம் அதை அறியாத
மனிதனடா..!!!!!
ஊர் விட்டு ஊர் வந்த பின்
ஊதாடியாகப் போகுதடா
ஊதும் பழக்கமும் ஒட்டி விடும்
ஊக்கம் கொடுத்துக் கெடுக்க
உறவாக வரும் சிலநண்பர்களடா...!!!
என்ன சொல்லி என்னபயன்
எங்கும் இந்த நிலைதானடா
எடுபிடி வேலையடா
எட்டுப்பட்டி ராணி போல்
எடுப்பானநடையடா...!!!
ஏங்க வைக்கும்பாவை
ஏதோ ஒன்றும் புரியாத
ஏளனமான சிரிப்புடா
ஏக்கங்கள் தருவதில்
இவர்கள் வில்லியடா...!!!
ஐம் பொறியும் மறந்து
ஐயம் இன்றி நாம் போய்
ஐலாவ்யூ என்று கூறும் அளவு
ஐயோக்கியர்களாக நம்மை மாற்றுவதில்
இவர்கள் கில்லியடா....!!!
ஒய்யாரப்பொண்ணுங்களா
ஒன்றாகத்தான் நீலங்கள்
ஒட்டி அன்ன நடை போடுவதா
ஒரு தடவை பிரிந்து வழி
கொடுத்தால் போதுமடா....!!!!!
ஓரக் கண் பார்வைஅதை
ஓரமாக ஒதிக்கி விட்டு
ஓயாத அலை போல் நான்
ஓடிஉழைக்கும் தொழிலாளி
போக வேண்டுமடா..!!!
ஔடதம் குடிக்க வேண்டுமடா
ஔவை பாட்டியாட்டம் நடுக்கம்
எடுக்குதடா....!!!
ஃதினமும் இது நான் பார்க்கும்
லீலையடா இதில் என்ன புதுமையடா