அப்பாவுக்கான என் சைக்கிள்

அப்பாவுக்கான என் சைக்கிள்.....
***********************************************
ஊரில் முதல் சைக்கிள் வாங்கியதொன்றும்
என் அப்பா இல்லை,

அதுவரை,
சித்திரைத் திருவிழாவில்
ராட்டினத்தையும், தேரையும்
தொட்டுப் பார்ப்பதுபோல் தான்
ஊரார் சைக்கிளையும்
தொட்டுத் திரிந்தேன்...

ஏக்கப் பெருமூச்சின்
இறுதியொரு நாளில் வாய்க்கப் பெற்றது
அப்பாவுக்கான என் சைக்கிள்.....

அவர் பயன்படுத்தியதை விட
நான் துடைத்ததில் தான்
வண்ணங்கள் போய்விட்டதாக
கவலைப்பட்டார்.

கைப் பெடலில் துவங்கி
கால் பெடலுக்கு
தனியாக நான் முன்னேறிய அன்று,
என் ஊர் வழியாக சென்ற
முதல் விமானமும் அதுதான்
முதல் பயணியும் நான்தான்.....

எழுதியவர் : ஆண்டன் பெனி (16-Sep-14, 7:10 pm)
பார்வை : 98

மேலே